மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய  திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை... புல்கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? என கேள்வி எழுப்பினார். 

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக  என  தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக  வை விமர்சனம் செய்கிறார்  ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும்  விதமாக, தமிழக  பாஜக  தலைவர்  தமிழிசை  சவுந்தரராஜன் இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும்.... குளம் நிறையும்.... தாமரை மலரும். இன்னும் சொல்லப்போனால் செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம் இது....... ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாவது குளங்களை நிரம்ப வைத்து , தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என  தமிழிசை சவுந்தரராஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து  உள்ளார்.

 

மேலும், பக்கத்துமாவட்டங்களில் சில மைல்களுக்கு அப்பால், மக்கள் இன்னும் ‘கஜா’தாக்கத்திலிருந்து முழுமையாக, மீண்டுவராத, சூழலில் ஆய்விற்குமட்டுமே, அனுமதிகொடுத்திருக்கும் சூழலில் அணைகட்டுவதற்கு இல்லை எனத்தெறிந்தும் ,திருச்சியில் போராடும், திமுகவையும், அதன் தோழமைக்கட்சிகளையும்,மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என  தமிழக  பாஜக  தலைவர்  தமிழிசை  சவுந்தராஜன் தெரிவித்து உள்ளார்.