"ஹவுடி" யை விஞ்சிய சென்னை ஏர்போர்ட்..! அசந்து போன மோடி..! அல்லு தெறிக்கவிட்ட கூட்டம்..!

சென்னை ஐஐடி விழாவிற்கு தனி விமானத்தில் வந்த மோடி நேராக விழா மேடைக்கு செல்வதாக  இருந்தாராம். ஆனால் அங்கு குழுமி இருங்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் ஆர்ப்பரிப்பை கண்ட மோடி ஆடி போய் விட்டாராம்.மோடி மோடி என்ற கோஷம் விண்ணை பிளந்ததால் அங்கிருந்த மேடையில் ஏறி தன்னுடைய உரையை நிகழ்த்தினார். 

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் முறையாக இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக,7 நாள் சுற்றுப் பயணமாக நியூயார்க் சென்று இருந்தார் மோடி. அப்போது 20  மேற்பட்ட பல முக்கிய கூட்டங்களில் பங்கேற்று வர்த்தகம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுமுறை மேம்படுத்துதல், இயற்கை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை பற்றி ட்ரமிப்பிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டார்.  

அங்கு நிகழ்த்தப்பட்ட  "ஹவுடி மோடி" நிகழ்ச்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வு உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் இந்தியா திரும்பிய மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார்.

நிகழ்ச்சிகள் பங்கேற்று பேசிய மோடி, "உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ் மொழி; நம் நாட்டின் சிறப்பு பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருப்பதே; தமிழகத்தில் இட்லி வடை தோசை என்றால் எனக்கு அவ்வளவு பிரியம்.. என பல விஷயங்களைப் பேசினார். 

இதில் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த மோடிக்கு தொண்டர்கள் மற்றும் மோடி ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வரவேற்றனர். அப்போது "ஜெய் ஸ்ரீ ராம்", "மோடி மோடி" என்ற முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததது. மேலும்  கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என அங்கிருந்த தொண்டர்கள் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். இந்த அனைத்து காட்சியையும் பிரதமர் மோடி ரசித்து பார்த்தார். 

இந்த ஒரு தருணத்தை பார்க்கும் போது அவுடி மோடி நிகழ்வில் கலந்துக்கொண்டு மோடிக்கு ஆதரவு கொடுத்ததை காட்டிலும், சென்னை விமான நிலையத்தில் மோடிக்கு அளிக்கப்பட்ட ஆதரவு அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து விட்டது என சிந்திக்க வைக்கிறது