ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது நாய்க்கு ரொட்டி துண்டுகளை தூக்கி போடுவது போல இந்த ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை எங்களுக்கு தூக்கி போட்டு போராட்டம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறிவரும் அண்ணாமலையின் நம்பிக்கையை வாழ்த்துகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்தித்த சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
வட மாநிலங்களைப் பொறுத்தவரையில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் பாஜக வெற்றி வாகை சூடி வரும் நிலையில், தென்னிந்தியாவில் அதன் மந்திரம் பலிக்கவில்லை என்றே சொல்லலாம். கர்நாடக மாநிலத்தை தவிர ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் அக்கட்சியால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. கேரளா தெலுங்கானாவில் ஓரளவுக்கு அதன் தாக்கம் இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரையில் பாஜக காலூன்ற முடியவில்லை எப்படியாவது தமிழகத்தில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்க வேண்டுமென பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இது வரை அதற்கு பெரிய பலனில்லை. அதற்காக அதிமுக பாமக தேமுதிக என பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் அதன் வியூகம் எடுபடவில்லை.

ஆனால் கடந்த ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தேர்தலை எதிர்கொண்ட பாஜகவுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது முன்பை விட அதன் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 12க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இது உண்மையிலேயே அக்காட்சியினருக்கு பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்காது எனக் கூறி வந்தார்கள், ஆனால் அங்கு பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. இதேபோல பல்வேறு மாநிலங்களிலும் பேச்சுக்கள் இருந்தது, ஆனால் அது அனைத்தையும் உடைத்து அந்த மாநிலங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இப்போது தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என கூறி வருகின்றனர். ஆனால் நிச்சயம் ஒரு நாள் தமிழகத்தை பாஜக ஆளும், அது நடந்தே தீரும் என அவர் உறுதிபட கூறி வருகிறார். அவரின் இந்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் பலரும் அண்ணாமலை கருத்துக்கு எதிர் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக குறித்து விமர்சித்து பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். ஏன் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரும் புதைக்கலாம் என்று சொல்ல தயங்குகிறார்கள். இந்தியா எப்போதும் ஒரே நாடு கிடையாது, அது மாநிலங்களில் ஒன்றியம் தான். அதைதான் அரசியலமைப்பு சாசனம் சொல்கிறது எனக் கூறினார்.

மேலும் ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது நாய்க்கு ரொட்டி துண்டுகளை தூக்கி போடுவது போல இந்த ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை எங்களுக்கு தூக்கி போட்டு போராட்டம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். நீட் தேர்வை பொருத்தவரையில் ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க மாட்டார். மத்திய அரசு தான் செய்ய நினைக்கும் அனைத்தையும் நீதிமன்றம் எடுத்துச் சென்று நீதிபதிகள் உத்தரவு மூலமாக செய்கிறது என அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நிச்சயம் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என அண்ணாமலை கூறுகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், அண்ணாமலையின் நம்பிக்கையை நான் வாழ்த்துகிறேன் என்றார்.
