தமிழ் மீடியா போட துணியாத சிதம்பரத்தின் சொத்து விவரங்களை மலையாள மீடியா வெளியிட்டுள்ளது என தமிழக பிஜேபி .சிதம்பரத்தின் சொத்து பட்டியல் என ட்வீட் போட்டுள்ளது.

"ஒண்ணு மகனை அப்பா ஜாமீன்ல எடுக்குறார். இல்ல அப்பாவை மகன் ஜாமீன்ல எடுக்குறார். சில சமயம் ரெண்டு பேரையும் அம்மா ஜாமீன்ல எடுக்குறாங்க. பிறகு அந்தம்மாவே தனக்கே ஜாமீன் கேக்குறாங்க.  ஜமீன்தார் குடும்பம் கேள்விப்பட்டிருக்கோம். இப்போதான் ஒரு புதிய ஜாமீன்தார் குடும்பத்தை பார்க்கிறோம் இப்படி நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளும் நிகழ்வு சிதம்பரத்தை பற்றி தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்க்கு முறைகேடாக பணம் பறி மாற்றத்திற்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் அவரின் வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று தூக்கினர். மனுவை லிஸ்ட் போடாமல் விசாரிக்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம்  ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. 

மலையாள செய்தி சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருக்கும், சிதம்பரத்தின் சொத்து விபரங்களை தமிழக பா.ஜ., தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மலையாள செய்தி சேனலான Janam tv ல் சிதம்பரத்தின் சொத்துக்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு, அந்த செய்தி தொடர்பான வீடியோவையும் தமிழக பிஜேபி  பதிவிட்டுள்ளது. 

தமிழக பிஜேபி வெளியிட்ட அந்த ட்விட்டரில்,  தமிழ் மீடியா போட துணியாத சிதம்பரத்தின் சொத்து விவரங்களை மலையாள மீடியா வெளியிட்டுள்ளது. "சென்னையில் 12 வீடுகள்,40 மால்கள்,16 தியேட்டர், 300 ஏக்கர் நிலம், ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ், வெளிநாட்டில் 500 ஏக்கர் மருத்துவமனை, குதிரைப்பண்ணை" போன்று பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது. என அதில் கூறியுள்ளனர்.