மு.க.ஸ்டாலினின் மருமகனுக்கு கண்டனம்… பாஜகவினர் சாலை மறியல்… திருச்செந்தூரில் பரபரப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முதல்வரின் மருமகனுக்காக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

bjp protest against son in law of cm stalin at Thiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முதல்வரின் மருமகனுக்காக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் இந்து ஆகமவிதிக்கு புறம்பாக யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக முருகப்பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வரின் மருமகன் யாகம் நடத்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தற்போது சர்ச்சையை கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: “ஒரு வாசகம், திருவாசகம்..” ரஜினி ஸ்டைலில் பன்ச் அடித்த செல்லூர் ராஜு - ரசிகர்கள் குஷி !

bjp protest against son in law of cm stalin at Thiruchendur

இதை அறிந்த பாஜகவினர் இந்த விவகாரத்தை இந்து அறநிலையத்துறை வரை கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி இந்து ஆகம விதிக்கு புறம்பாக யாகம் நடத்திய சபரீசனை கண்டித்து பாஜகவினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தின் முன்பு சாலைமறியல் போராட்டத்திற்காக குவிந்தனர். அப்போது எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று காவல்துறையினர் சார்பில் போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை கண்டுக்கொள்ளாத பாஜகவினர் காவல்துறையின் மறுப்பையும் மீறி போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறைக்கு பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக துண்டு துண்டா உடைஞ்சதுக்கு திமுக தான் காரணம்.. பாஜக இல்லை.. மனம் திறந்து பேசிய சசிகலா.

bjp protest against son in law of cm stalin at Thiruchendur

அப்போது பாஜக சாலை மறியல் போராட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா காவல்துறையினரிடம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகம விதிக்கு எதிராக யாகம் நடந்தபொழுது ஏன் இவ்வளவு காவல்துறையினர் அப்போது வரவில்லை என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து சபரீசனை கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios