Asianet News TamilAsianet News Tamil

கோவில்கள் மீது கை வைத்தால் பாஜக அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்கும் - எச்.ராஜா எச்சரிக்கை

கோவில் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு விளையாடக்கூடாது என்று எச்சரித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இந்து கோவில்களைக் தொட்டால் பாஜக தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

bjp person h raja warning to dmk government on temples issue in coimbatore
Author
First Published Jul 5, 2023, 7:07 PM IST

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 1979ம் ஆண்டு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நீதிபதி  சந்திர சூட்  தலைமையில் 5 நீதிபதி கொண்ட அமர்வில்  வழங்கப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால் ஆளுநருக்கு இணையான நிர்வாகியாக கூட  முதல்வர் இருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரம் படைத்தவர் முதல்வர் அல்ல. ஆளுநர் தான் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநர் ஒருவரைக் பார்த்து சந்தோஷப்பட்டால் அவர் மந்திரியாக இருக்கலாம். இல்லை என்றால் அவர் மந்திரி இல்லை எந்திரி என்று அரசியல் சட்டம்  சொல்வதாக அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே ஆளுநரை விமர்சிக்கும் முட்டாள்கள் இந்த தீர்ப்பை படிக்க வேண்டும். முட்டாள் என்று நான் சொல்லவில்லை. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் ஈ.வெ.ராவே முட்டாள்கள் தான் எனக்கு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் பொன் முடி, கே.என்.நேரு ஆகியோர் மீது ED வழக்கு உள்ளது. ஒவ்வொருத்தராக அனுப்பாலம் இல்லையென்றால் மொத்தமாக அனைவரையும் அனுப்பலாம். ஆனால் அதை செய்யவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்பது எனது கனிப்பு. 

பொதுசிவில் சட்டம் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழகத்தில் முயற்சி - தமிழிசை குற்றச்சாட்டு

அரசியில் சாசன படி ஆளுநர் சரியாக தான்  செயல்படுகிறார். பீகாரியைக் முட்டாள் என்று சொன்னால் ஸ்டாலின் பீகாருக்கு வர கூடாது என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெட்கமே இல்லாமல் பீகாருக்கு சென்று வந்தார் ஸ்டாலின் இன்றும் அதேபோல் அந்த பீகார் கூட்டத்தில் ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார் என்று பிரஷாந்த் கிஷோர் சொல்லியிருக்கிறார். இது கண்டிதக்கது.

ஒரு மாநிலத்தையே  பிரஷாந்த் கிஷோர் இழிவு செய்துள்ளார். உங்களுக்காக பேசுவது போல் விபரம் தெரியாமல் பேசும் தீய சக்திகளையும், ஆளுநர் பற்றி ஏதும் தெரியாமல்  விவாதம் செய்யும் சில யூடியூபர்கள்  பேசுபவதையும்  ஸ்டாலின் நம்பக்கூடாது. அவர்களை அடக்கி வைக்க வேண்டும். உங்களுக்காக கொம்பு சீவி விட்டு பேசி, உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். 

ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர். அவரின் நலனில் எனக்கு அக்கறை உள்ளது. அவர் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும். அமைச்சர் சேகர்பாபு ஆள்கடத்தல் பாபு. அவரது மகளையும், மகளின் கணவரையும் 60 நாட்களாக கடத்தி வைத்திருந்தார். இந்த விவாகரத்தில் அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளது. அனைவரையும் சட்டத்தின் முன் நிற்க வைக்க முடியும்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூலம் கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள் - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரி

கோவில் விஷயத்தில் சேகர் பாபு விளையாடக்கூடாது. குறிப்பாக சிதம்பரம் கோவிலை கட்டியது தீட்சியர்கள் தான். எனவே கோவிலை கட்டியது மன்னர்கள் என்று ஈ.வெ.ரா.வை பின்பற்றும் முட்டாள்கள் சொல்கின்றனர். இந்து மதத்தை மொட்டியடிக்க இந்த இந்து விரோத அரசு செயல்படுகிறது. கோவில் விஷயத்தில் சேகர்பாபு விளையாடக்கூடாது. கோவில் சொத்தை தொட்டல் குடி அழியும். இதுவே சேகர்பாபுவுக்கு இறுதி எச்சரிக்கை.

சிதம்பரம் நடஜாரை தொட்டால் அவ்வளது தான். அமைச்சர் சேகர்பாபு சிவனிடம் விளையாட வேண்டாம். நடராஜரைக் அளித்தால் அது நடக்காது. மேலும் கோவில் மாடுகளை எல்லாம் கேரளாவுக்கு வெட்டுக்கு  அனுப்புவதாக தகவல் வருகிறது. இந்து கோவில்களைக் தொட்டால் பாஜக தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios