Bjp parlimentary board to meet today for cms selection
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதல் அமைச்சராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது....

403 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச்தில் பா.ஜ.க. 325 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கிடைத்த வெற்றி என்பதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் பா.ஜ.க. திக்குமுக்காடிப் போயுள்ளது

எப்போதும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் தேர்தலைச் சந்திக்கும் டிசைனைக் கொண்ட பா.ஜ.க. இம்முறை வேட்பாளர்களை அறிவிக்காமல், ராமர்கோவில், விவசாய கடன்தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை முன்னிறுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

இது ஒருபுறம் சாதகமான அம்சமாகக் கருதப்பட்டாலும், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் யாரை முதல் அமைச்சராக தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமும் மோடிக்கு தற்போது எழுந்துள்ளது.
தகுதியும் செயல்திறனும் மிக்கவர்களுக்கே முதல் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மூத்த தலைவர்கள் பலரும் முதல்வர் நாற்காலி தங்களுக்கு கிடைக்காதோ? என்று கலக்கத்தில் உள்ளனராம்

இதற்கிடையே முதல் அமைச்சர் பதவியை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் அக்கட்சியின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.இதில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங்,வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
