bjp mla controversial speech about muslims

மக்கள் பிரதிநிதிகள் இந்துக்களுக்காக மட்டுமே வேலை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களுக்கு வேலை செய்யக்கூடாது என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பாஜக தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது வாடிக்கையாகிவிட்டது. கர்நாடக எம்.எல்.ஏ பாசனகவுடா பாட்டீல் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, மக்கள் பிரதிநிதிகளும் கார்ப்பரேட்டுகளும் இந்துக்களுக்காக மட்டும் தான் வேலை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களுக்காக வேலை செய்யக்கூடாது. எனது தொகுதியில் நான் இந்துக்களின் வாக்குகளால் தான் வெற்றி பெற்றேனே தவிர இஸ்லாமியர்களின் வாக்குகளால் அல்ல. என் அலுவலகத்திற்குள் தாடி வைத்துக்கொண்டும், புர்கா அணிந்துக்கொண்டும் யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் பாசனகவுடா கூறினார். 

பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடாவின் பேச்சு இஸ்லாமிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு வெளிப்படையான சவாலாக அமைந்துள்ளது பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு.