உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பாலியல் பாணியில்  மீண்டுமொரு பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது ,  விதவைப் பெண்ணை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பாஜக எம்எல்ஏ பலாத்காரம் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .  இதில் உள்ளூர் காவல் நிலையத்தில்  7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ,  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,    இதை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை ,  பாலியல் சம்பவங்களுக்கு பெயர்போன உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது . 

உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி  பகுதியை சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் . அதல் கூறப்பட்டுள்ளதாவது :-  படோஹி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ரவீந்திரநாத் திரிபாதி , இவருடைய மகன் சந்தீப் திவாரி என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் ,  இதுகுறித்து போலீசில் புகார் கூறாமல் இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் ,  இதை நம்பி எனது புகார் மனுவை வாபஸ் பெற்றேன் ,  இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தித்த திவாரி , ரவீந்திரநாத் திரிபதி உள்ளிட்ட 7 பேர் எனனை ஒரு மாதம்காலம்  ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதில் கார்பமான என்னை வற்புறுத்தி  கருகலைப்பு செய்தனர் ,  எனவே என்னை பாலியல் வன்புணர்வு செய்த, சந்திப் திவாரி,   ரவீந்திரநாத் திரிபதி உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார் .  இதனை அடுத்து அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 7 பேர் மீது படோஹி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .  இதையடுத்து அந்தப் பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார் .  இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட எஸ்பி ரவீந்திரநாத் வர்மா,   ஏற்கனவே உன்னா கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரின் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்நிலையில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு வந்துள்ளது இவருக்கும் தண்டனை பெற்று தருவோம் என தெரிவித்துள்ளார்.