புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த  வாகனங்கள் மீது துவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 50 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்துக்கு மோடி, ராகுல், மன்மோகன்சிங் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர்  வீரர்களின் உடல்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் இறுதிச் சடங்கு மற்றும் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள், , எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலில் மரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்களும் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தது. அந்த உடல்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.