பாஜக கடந்த சில ஆண்டுகளாவே புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மிஸ்டுகால், நேரடி சேர்க்கை என பல முறைகளைக் கையாண்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.,வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி, ஜூலை 6ம் தேதி முதல், 20 வரை நடந்தது. 

இதில், ஏழு கோடிப் பேர், புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை, 18 கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும்பாஜகவில் சேர, மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில், புதிய உறுப்பினர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் முதல், பாஜகவி  அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடக்க உள்ளன. கட்சியின், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தல், டிசம்பரில் நடக்கும், அதைத் தொடர்ந்து, தலைவர் தேர்தல் நடக்கும் என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.