Asianet News TamilAsianet News Tamil

பழனி மலைக்கு காவடி எடுக்கும் பாஜக தலைவர்கள். சட்டமன்றத்தில் வெல்ல எல்.முருகனும், சி.டி.ரவியும் பகிரத முயற்சி.

வரும் 27-ம் தேதி பழனியில் தானும், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் காவடி எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா? என்றும் கேள்வி எழிப்பினார். 

BJP leaders take Kawadi to Palani Temple . L. Murugan and CD Ravi take effort to win in the Assembly.
Author
Chennai, First Published Jan 23, 2021, 1:27 PM IST

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்களுக்கு, உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் எல்.முருகன் வழங்கினார். 

BJP leaders take Kawadi to Palani Temple . L. Murugan and CD Ravi take effort to win in the Assembly.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி திகழ்ந்து வருவதாகவும், இதுவரை 96 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவித்தார். பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகப் பேசிய எல்.முருகன், வரும் 27-ம் தேதி பழனியில் தானும், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் காவடி எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். 

 BJP leaders take Kawadi to Palani Temple . L. Murugan and CD Ravi take effort to win in the Assembly.

மேலும், தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு அருகதை இல்லை என்ற அவர், அவரால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா? என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார். பாஜகவில் எந்த கேங்ஸ்டரையும் சேர்ப்பதில்லை என்று பேசிய எல்.முருகன், விவசாயிகளின் போராட்டம் தூண்டிவிடப்பட்ட ஒன்று என்றும், விவசாயிகளின் பெயரில் Urban Naxals தான் போராடுகிறார்கள் என்றும் பேசினார். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் எல்.முருகன் பேசியது குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios