தமிழக பாஜக தலைவர்கள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போடும் நவரச நாடகம் தமிழகம் இதுவரை பார்க்காத ஒன்றாக் உள்ளது. ஆளுக்கொரு பக்கம் வேஷம் கட்டி தமிழ மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.

ஒருவருக்கு ஒரு வாய் இருக்கலாம் இருவாய் இருக்கலாம், ஆனால் ஊரெல்லாம் வாயாக இருக்கும் தலைவர்கள் கொண்ட கட்சியாக பாஜக உள்ளது என்று ஜல்லிக்கட்டு ஆதர்வாளர்கள் பாஜகவின் நிலைபாட்டால் ஆத்திரமடைந்து விமர்சனம் வைக்கிறார்கள்.

உண்மைத்தான் என்று எண்ண தோன்றும் அளவுக்கு அவர்கள் ஒவ்வொருவர் நடவடிக்கையும் உள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை பொறுக்கிகள் என்று விமர்சிக்கும்  சுப்ரமணியம் சாமி பாஜஜ தலைவர் , மவுனகுருவாக கருத்து சொல்லாமல் இருக்கும் மோடி பாஜக தலைவர், எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கடைசி நேரத்தில் கைவிரித்த வெங்கய்யா நாயுடு பாஜக தலைவர் , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்பிக்கை அளித்து கடைசி நேரத்தில் பல்டி அடித்த அமைச்சர் தவே ஒரு பாஜக தலைவர்.

ஜல்லிக்கட்டை யார் தடுத்தாலும் நடத்துவோம் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுகொள்வோம் என ஆதரவாக முழங்கியவர் எச்.ராஜா ஒரு பாஜக தலைவர் , ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வோடு சம்பத்தப்பட்டது ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டுன்னு சொன்ன இலகணேசன் பாஜக தலைவர்களில் ஒருவர்.

ஜல்லிக்கட்டை மத்திய அரசு  நிச்சயம் கொண்டு வரும் சட்டப்படித்தான் இளைஞர்கள் நடக்கவேண்டும் என்று சொன்ன தமிழிசை பாஜக தலைவர். ஜல்லிக்கட்டு கட்டாயம் வரும் திமுக போன்ற கட்சிகள் இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்கள் என்று சவால் விட்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஒரு பாஜக தலைவர்.

இப்படி கடந்த ஒரு மாத காலமாக பல குரல்களில் பேசி மக்களை குழப்பி வந்த பாஜக தலைவர்கள் யார் பேசுவது சரியானது என மக்கள் புரிந்துகொள்ள கூடாது என்பதற்காகத்தான் பல கருத்துக்களை பல தலைவர்கள் பேசுவார்கள்.

ஜல்லிக்கட்டை நடத்த கூடாது அதற்காக போராடுபவர்கள் பொறுக்கிகள் , சாக்கடை வலைக்குள் இருக்கும் எலிகள் என்று பேசும் சுப்ரமணியம் சுவாமி பாஜக்வின் மூத்த தலைவர். காவிரி பிரச்சனையில் அவா தண்ணி தரமாட்டா , ஏன் இங்க இவ்வளவு பெரிய கடல் இருக்கே கடல் நீரை குடிநீராக்கும் டெக்னாலஜி இருக்கே அதை பயன் படுத்தி விவசாயம் செய்யலாமே என்று கிண்டலடித்த அற்புதமான் பாஜக மூத்த தலைவர்.

இவர் இப்படி பேசுகிறாரே என்று தமிழிசை , பொன்னாரிடம் செய்தியாளர்கள் கேட்டால் அது அவரது சொந்த கருத்து என்பார்கள். பொறுக்கிகள் என்று திட்டுவதும் சொந்த கருத்து என்று கேட்டிருந்தா தமிழிசை கூறியிருப்பார். 

ஆனால் ஜல்லிக்கட்டு கட்டாயம் வந்தே தீரும் மத்திய அரசு நல்ல முடிவெடுக்கும் என்று சொன்ன தமிழிசை , பொன்னார் கருத்து தான் சொந்த கருத்து என்பது போல் மத்திய அரசு மவுனமாக இருக்கிறது.
ஆனால் ஜல்லிக்கட்டு கூடாது , போராடுபவர்கள் பொறுக்கிகள் என்று சொன்ன சுனா.சாமிக்கள் கருத்துப்படித்தான் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை. இதை பார்த்து தமிழக மக்களிடம் அன்னியப்பட்டு போய்விடுவோம் என்ற பயத்தில் பொன் ராதாகிருஷ்ணன் வழக்கம் போல் மன்னிப்பு கேட்டார். போன ஆண்டும் அவர் இதே போல் கூனிக்குறுகி மன்னிப்பு கேட்டு சில நாட்களிலேயே நெஞ்சை நிமிர்த்தி சென்றார். 

பொன்னார் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆதரவாகத்தானே பேசினார். என்று பேசிய த்மிழிசை கோவையில் செய்தியாளர்களிடம் தனது நிலையை மாற்றி தானும் மன்னிப்பு கேட்டுகொள்வதாக அறிவித்துள்ளார். 

சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் ஜல்லிக்கட்டுக்காக நாங்கள் ஆதரவுதான் , உச்சநீதிமன்றம் தடை உள்ளதே என பழைய கதையை சொல்லதுவங்கி விடுவார்கள். ஆனால் காவிரி , ரூபாய் நோட்டு விவகாரம் , ஜால்லிகட்டு என அனைத்து விவகாரத்திலும் பாஜக மக்களிடம் தனிமை பட்டு போனது. 

2014 ல் மோடியை ஆதர்ஷ புருஷனாக தூக்கி திரிந்த சமூக வலைதள பயன்பாட்டு இளைஞர்கள் தான் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடுமையாக சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இவர்கள் உணர்வு அப்படியே 180 டிகிரி எதிர் திசையில் பாஜகவுக்கு எதிராக திரும்பி உள்ளது என்பதே உண்மை.