உங்களுக்கும் வீடு இருக்கு அமைச்சரே..! பார்த்துக்கோங்க.! அண்ணாமலைக்கு ஆதரவாக வரிந்து கட்டிய பொன்னார்

Annamalai : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது. அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை  தாண்ட முடியாது.' என்று கூறினார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.

Bjp leader pon radhakrishnan against speech minister mrk panneerselvam fight with annamalai issue

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகை கடன் தள்ளுபடி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் திட்டம் என பல்வேறு செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Bjp leader pon radhakrishnan against speech minister mrk panneerselvam fight with annamalai issue

மக்களுக்கு பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடர்ந்து அமையும். 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அவ்ளோ தைரியமா? பாத்துடலமா? இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது. 

அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை  தாண்ட முடியாது.' என்று கூறினார்.  தற்போது இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்னண்.  நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய போது, 'குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு மதரீதியான கலவரத்தால் ஏற்பட்ட வடுவை ஆறவைக்க கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். 

மதம், சாதி மற்றும் அரசியல் ரீதியாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சில சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க தூண்டுகோலாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 19-ந் தேதி இரவு 10 மணிக்கு சில சாதாரண பிரச்சினையில் ஒரு தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர். பிரச்சினயைில் சமரசம் செய்ய முயன்ற வரும் தாக்கப்பட்டுள்ளார்.

Bjp leader pon radhakrishnan against speech minister mrk panneerselvam fight with annamalai issue

இந்த விஷயத்தில் போலீசார் முறையாக நடக்கவில்லை. இதை வைத்து பார்க்கும்போது குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் போலீசார் செயல்படுவது போல தெரிகிறது. போலீசார் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது திமுக தான். தேர்தல் அறிக்கையில் கூறியபடி விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

பேரறிவாளனை கோர்ட்டு விடுதலை செய்தது. ஆனால் அவரை முதல்வர் மு.க ஸ்டாலின் கட்டி அணைத்து உள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்து தான் செய்கிறாரா? என்று தெரிய வில்லை. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை. திமுகவுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போகும் என்று ஒரு அமைச்சர் சொல்லி இருப்பதாக தெரிகிறது.அந்த அமைச்சருக்கும் வீடு உள்ளது' என்று கூறினார்.

இதையும் படிங்க : "எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. அடிச்சு தூக்குங்க.!" அதிமுகவினருக்கு எஸ்.பி வேலுமணி போட்ட ஆர்டர் !

இதையும் படிங்க : தமிழகத்தில் மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வா..? அமைச்சர் சொன்ன 'அதிர்ச்சி' தகவல் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios