ஆ.ராசா பேசினால் முதல்வர் கேட்பார், ஆனா நாங்க? திமுகவின் சரிவு தொடக்கம் - திமுகவை விளாசிய சி.பி.ஆர் !

ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பார். ஆனால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம் என்று பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

Bjp leader cp radhakrishnan speech against a raja and cm mk stalin at kovai

கோவையில் பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஒரு சட்டம் இயற்றப்படுவது மக்களுக்கான பாதுகாப்பை தருவதற்கு தான் தீண்டாமைக்கு எதிராக பி.சி.ஆர் சட்டம் இயற்றப்பட்டது.

காலம் காலமாக இருந்து வருகின்ற வன்கொடுமையான மனிதனை மனிதன் தீண்டாதவனாக நடத்துகின்ற போக்கை மாற்ற வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சட்டத்தையே ஒரு அரசே தவறாக பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கத்தை சார்ந்த தலைவர்களை கைது செய்துள்ளது. இந்திய பாரத வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.

Bjp leader cp radhakrishnan speech against a raja and cm mk stalin at kovai

இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

மாநில அரசு பி.சி.ஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பிஜேபினுடைய கோவை மாநகர் மாவட்ட தலைவர் உத்தமன் பாலாஜி அவர்களை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு அரசே சட்டத்தை தவறாக பயன்படுத்துகிற போக்கு என்பது மக்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழலை உருவாக்கிவிடும். ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பார். ஆனால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம். இந்த சரிவில் இருந்து ஒரு போதும் மீள முடியாது. ஒவ்வொரு தமிழிச்சியின் தன்மானத்தை காக்க உள்ளே இருந்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடு பாஜகவினர் சிறையில் உள்ளனர். முதல்கட்டமாக ஒரு அமைப்பை தடை செய்துள்ளது.

Bjp leader cp radhakrishnan speech against a raja and cm mk stalin at kovai

இதையும் படிங்க..‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’

ஒரு தேச விரோத அமைப்பு யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பறைசாற்று கொண்டிருக்கும் அமைப்பு சமூகத்தினுடைய ஒற்றுமைக்கு நலன் இல்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் பாப்புலர் பிரண்ட் ஆப் பாகிஸ்தான் ஆக தான் இந்த மண்ணில் செயல்பட்டு வந்தது. தடை செய்யப்பட்டது மிகுந்த வரவேற்பதக்கது. இவர்களோடு தொடர்பு உள்ளவர்கள் வருங்காலத்தில் வருத்ததிற்கு உள்ளாவார்கள்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios