MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சட்டைப் பையில் படம்... நெஞ்சுக்குள்ள விசுவாசம்? சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் 'போட்டோ' மோதல்!

சட்டைப் பையில் படம்... நெஞ்சுக்குள்ள விசுவாசம்? சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் 'போட்டோ' மோதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. கட்சி மாறியது யார் எனத் தொடங்கிய வாக்குவாதம், இறுதியில் இருவரின் சட்டைப் பையில் உள்ள புகைப்படம் குறித்த அரசியல் விசுவாச விவாதமாக மாறியது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 11 2026, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சோசியல் மீடியாவோட ஹாட் டாபிக்!
Image Credit : Asianet News

சோசியல் மீடியாவோட ஹாட் டாபிக்!

தமிழ்நாடு சட்டப்பேரவைனாலே வழக்கமான அறிக்கைகளும், காரசாரமான வாக்குவாதங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனா, சமீபத்துல நடந்த நிதிநிலை அறிக்கை விவாதத்துல, அரசியலோட டூ-டாப் சீனியர் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் இடையே நடந்த "சட்டைப் பை போட்டோ" விவாதம் தான் இப்போ சோசியல் மீடியாவோட ஹாட் டாபிக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பேரவைக்குள்ள ஒரு 'ட்விஸ்ட்' என்ட்ரி!
Image Credit : Asianet News

பேரவைக்குள்ள ஒரு 'ட்விஸ்ட்' என்ட்ரி!

தமிழக சட்டமன்றத்தில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. திமுக உறுப்பினராகப் பேரவையில் வீற்றிருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட் மீதான தனது உரையைத் தொடங்கி, அரசின் செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், "தமிழ்நாடே பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு தூய ஆட்சியைப் பற்றி, ஏமாற்றத்தை உருவாக்குகிற ஆட்சி என்று ஓபிஎஸ் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. நீங்க கட்சி மாறி இடத்திற்கு வந்ததற்காக இவ்வளவு தூரம் துதிபாட வேண்டிய அவசியமில்லையே!" என்று நேரடியாகவே ஒரு சவாலை வீசினார்.

Related Articles

Related image1
Now Playing
"என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் மு.க.ஸ்டாலின்!" OPS அதிரடி பேச்சு!
Related image2
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
36
"இடத்தை மாத்துனதே நீங்கதானே பாஸ்!" - ஓபிஎஸ் பதிலடி
Image Credit : our own

"இடத்தை மாத்துனதே நீங்கதானே பாஸ்!" - ஓபிஎஸ் பதிலடி

செங்கோட்டையனின் இந்தத் திடீர் விமர்சனத்தை எதிர்பார்க்காத ஓபிஎஸ், தமக்குரிய அமைதியான பாணியிலேயே ஆனால் அழுத்தமாக ஒரு ரிட்டர்ன் பஞ்ச் கொடுத்தார்.

"அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் என்னைப் பார்த்து இடம் மாறியவர் என்று கூறுகிறார். ஆனால், இந்த அவையில் அந்த இடத்தை முதன்முதலில் மாற்றியவர் நமது அமைச்சர் செங்கோட்டையன் தான் என்பதை நான் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்!"

என்று ஓபிஎஸ் கூற, அவையில் இருந்த உறுப்பினர்கள் இடையே லேசான சிரிப்பலையும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

46
சட்டைப் பை 'போட்டோ' பொலிடிக்ஸ்!
Image Credit : X

சட்டைப் பை 'போட்டோ' பொலிடிக்ஸ்!

ஓபிஎஸ்-ன் இந்த பதிலடிக்கு அடுத்து, தவெக அமைச்சர்கள் களத்தில் இறங்கி அடுத்தடுத்து கொடுத்த கவுன்ட்டர்கள் தான் ஆட்டத்தையே மாற்றின. அமைச்சர் ராஜ்மோகன் குறுக்கிட்டுப் பேசியது பேரவையின் கவனத்தை மொத்தமாக ஈர்த்தது.

"முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, இடத்தை முதன்முதலில் மாற்றியவர் நம்ம அமைச்சர் செங்கோட்டையன் தான் என்றார். ஆனால், இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால்... அவர் இடத்தை மாற்றியபோதும், அவரது இதயத்தின் அருகே உள்ள அந்த அம்மா (ஜெயலலிதா) புகைப்படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்! ஆனால், அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் சட்டைப் பையைப் பார்க்கும்போது... இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது!" என்று அவர் கூறியது பேரவையில் செம வைப் ஒன்றை உருவாக்கியது.

56
"ஜெயலலிதா தந்த பதவி... ஆனா இப்போ பையில யாரு படம்?"
Image Credit : Asianet News

"ஜெயலலிதா தந்த பதவி... ஆனா இப்போ பையில யாரு படம்?"

அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு ஆதரவாக மற்றொரு அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவும் களமிறங்கினார். ஓபிஎஸ்-ன் பழைய அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பிய கேள்வி, விவாதத்தை மேலும் காரசாரமாக்கியது. “அமைச்சர் செங்கோட்டையன் இடம் மாறி இருக்கலாம். ஆனால், இன்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைத்தான் தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறார். ஆனால், அதே ஜெயலலிதா அம்மாவால் முதல்வராக அமர்த்தப்பட்டவர் அண்ணன் ஓபிஎஸ்... இன்று அவரது சட்டைப் பையில் யாருடைய படம் இருக்கிறது?” என ஆதவ் அர்ஜுனா நேரிடையாகவே கேள்வி எழுப்பி, ஓபிஎஸ்-க்கு அரசியல் ரீதியான செக் வைத்தார்.

66
மார்க்கெட் மாறிய அரசியல்... மாறாத நினைவுகள்!
Image Credit : Asianet News

மார்க்கெட் மாறிய அரசியல்... மாறாத நினைவுகள்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவருமே அதிமுக எனும் ஒரே இயக்கத்தில் பல தசாப்தங்களாகத் தோளோடு தோள் நின்று பயணித்த மூத்த தலைவர்கள். கடந்த தேர்தலுக்கு முன்பாக ஏற்பட்ட அரசியல் புயலில் இருவரும் ஆளுக்கொரு பாதையைத் தேர்ந்தெடுத்தனர். செங்கோட்டையன் தவெக-வில் இணைந்து அமைச்சரானார்; ஓபிஎஸ் திமுக-வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினரானார்.

எதிரெதிர் அரசியல் தளங்களில் நின்றாலும், சட்டைப் பையில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் மூலம் வெளிப்பட்ட 'அரசியல் விசுவாசம்' பற்றிய இந்த விவாதம், சட்டமன்றத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது.

பதவிகளும் இடங்களும் மாறினாலும், சட்டைப் பையில் இருக்கும் படம் மூலமாக வெளிப்படும் 'ஜென்-சி ட்ரெண்ட்' விவாதம் தான் இப்போதைக்கு இணையதளங்களின் அல்டிமேட் பொலிட்டிக்கல் டிரெண்டிங்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
செங்கோட்டையன்
திமுக
Latest Videos
Recommended Stories
Recommended image1
Archana Kalpathi: திரிஷாவின் நெருங்கிய தோழிக்கு அரசுப் பதவி.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு.!
Recommended image2
CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?
Recommended image3
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Related Stories
Recommended image1
Now Playing
"என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் மு.க.ஸ்டாலின்!" OPS அதிரடி பேச்சு!
Recommended image2
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved