கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் நடந்து முடிந்த   ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில்  படு தோல்வியை சந்தித்தது. இது அட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அது மட்டுல்லாமல் ஆட்சியை இழந்த பிறழ சந்திரபாபு நாயுடு பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த நாயுடு, பின்னர் தனி அந்தஸ்து என்ற ஒற்றைக் கோரிக்கைகாக பாஜக உறவை முறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பாஜகவை கடுமையாக எதிர்த்தார்.

ஆனால் சட்டமன்ற மற்றும் மக்களைத் தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல் அடைந்தது. ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  அமோக செற்றி பெற்றது. ஜெகன் மோகன் முதலமைச்சரானார். இதையடுத்து நாயுடுவுக்கு இறங்கு முகம்தான். ஒரு புறம்  பாஜகவின் தாக்குதல் மறுபுறம் ஜெகன் மோகனின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவற்றால் நொந்து போன சந்திரபாபு நாயுடு அண்ணையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து நாங்கள் பாஜக தலைமையிலான அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம். ஆனால் முடிவு எங்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்தது. மத்திய அரசின்  ஒத்துழையாமை காரணமாக நாங்கள் பொருளாதார ரீதியாக இழந்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக தெலுங்கு தேசம் கட்சி அதிகாரத்தை இழந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை நாங்கள் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என  தெரிவித்ருந்தார்.

ஏற்கனவே பாஜக நாடு முழுவதும் ஒரே கட்சி ஆட்சி அது பாஜக ஆட்சி  என இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சியை இணைக்க வேண்டும் என்றும் அதற்காக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் ஜி வி எல் நரசிம்ம ராவ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற பாஜக  40 சதவீதம் வாக்குகளை பெற்ற கட்சியை இணைக்கும்படி கேட்டு உள்ளது. இது தென்னிந்தியாவின்  தற்போதைய அரசியல் நிலை மற்றும் தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்திற்கான பாஜகவின் திட்டத்துடன் தொடர்புடையது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள் .

கர்நாடகாவைத் தவிர தென் மாநிலங்களில் ஒரு வல்லமைமிக்க சக்தியாக வளர முடியாததால் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியை  இணைத்து கொள்ள துடிக்கிறது.

தற்போது சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிக்கை பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான நாயுடுவின் விருப்பத்தை அடையாளம் காட்டுவதாக பாஜக கருதியது. இதையடுத்து தான் பாஜக – தெலுங்கு தேசம் கட்சிகள் இணைப்பு குறித்து பேச்சு அடிபடுகிறது.