தமிழகத்துக்கு காவிரியை கொண்டு வருவதற்கான அக்கறை பாஜகவிடம்தான் உள்ளது என்றும் போராட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மகிப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. 

ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் கூறியிருந்தன. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால், நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருவிடைந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரின் வருகையின்போது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒரு மாத காலத்தில் காவிரிப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என்றார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி, காவிரி விவகாரத்தில் கர்நாடகா வஞ்சித்தபோது உங்களுக்கு உணர்ச்சி ஏற்படவில்லையா?. போராட்டத்தால் காவிரியை கொண்டு வர முடியாது என்று கூறினார்.

காவிரியை தமிழகம் கொண்டு வருவதற்கான அக்கறை, பாஜகவிடமும் மத்திய அரசிடமும்தான் உள்ளது என்றும் போராடுபவர்களிடம் இல்லை என்றும் கூறினார்.

போராட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும். நியூட்ரினோ திட்டத்தில் விவசாயம், பயங்கரவாதக் கண்காணிப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளது என்று தமிழிசை கூறினார்.

தமிழகத்துக்கு காவிரி கொண்டு வருவதில்