தமிழகத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே இவ்வளவு ஆட்டம்னா! அதிகாரத்துக்கு வந்துட்டா அவ்வளவுதான்! லெனின்
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரிகளில் இல்லாத போதே, பாரதிய ஜனதா கட்சியும், அதன் நிர்வாகிகளும், ஒன்றிய அரசின் அமலாக்க துறையை வைத்துக்கொண்டு அப்பாவிகள், விவசாயிகள், ஏழைகள், பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களை மிரட்டி வருகின்றனர்.
வடமாநிலங்களில் தொடர்ந்து பட்டியல் சமூகங்களை இழிவு படுத்தியும், கொலை செய்து வருவதும், அதற்கு துணையாக ஒன்றிய அரசின் துறைகளை வைத்துக்கொண்டு மிரட்டுவதுமாக செயல்படும் பாஜக தற்போது அதே பாணியை தமிழகத்திலும் செயல்படுத்த முனைப்பு காட்டுகிறது என லெனின் கென்னடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழர் உரிமை மீட்புக் களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்பவர் மீதும், அதற்கு துணை போகும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும், தமிழ்நாடு அரசு, பட்டியல் சமூகத்திற்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரியது தொடர்பாக சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன்பாளையம் காராமணி கிராமத்தைச் சார்ந்த பட்டியல் - தேவேந்திரகுல வேளாளர் வகுப்பைச் சார்ந்த 70 வயதினை கடந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் - இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க;- சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? சீறும் சீமான்.!
மேற்கூறிய விவசாயிகள் இருவருக்கும் சொந்தமான 6.50 ஏக்கர் நிலம் உள்ளது. என் நிலத்தில் விவசாயம் செய்து உழைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பாரதிய ஜனதா குணசேகரன் கட்சியின் கிழக்கு என்பவரின் நிலத்தின் மாவட்ட செயலாளர் அருகே மேற்கண்ட விவசாயிகளின் நிலம் இருப்பதினால், அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு, முதலில் அடிமாட்டு விலைக்கு கேட்டுள்ளார். விவசாயிகள் இருவரும் நிலத்தினை தர மறுத்ததினால் பொய்யான ஆவணங்களை தயார் செய்து மிரட்டியுள்ளார். அதன் பின்பும் தர மறுத்ததினால் ஒன்றிய அரசின் அமலாக்க துறையின் மூலம் கடிதம் அனுப்பி மிரட்டி இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே, விவசாயிகள் இருவரையும் பாஜக நிர்வாகி குணசேகரன் மூலம், அமலாக்க துறை தொடர்ந்து சாதிப் பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்பி மிரட்டி வருவதாகவும், அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை போவதாகவும் விவசாயிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரிகளில் இல்லாத போதே, பாரதிய ஜனதா கட்சியும், அதன் நிர்வாகிகளும், ஒன்றிய அரசின் அமலாக்க துறையை வைத்துக்கொண்டு அப்பாவிகள், விவசாயிகள், ஏழைகள், பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களை மிரட்டி வருகின்றனர். ஒருவேளை நாளை ஏதோ ஒரு வகையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இந்த அடித்தட்டு மக்களின் நிலையை என்னவாக இருக்கும் என்று, எண்ணி கூட பார்க்க முடியவில்லை.
"இது ஒன்றும் வட மாநிலங்கள் அல்ல இது தமிழ்நாடு" என்று பாரதிய ஜனதா கட்சியினருக்கும், அதன் ஊது குழல் ஒன்றிய அமலாக்கத்துறைக்கும் கடும் எச்சரிக்கையினை தெரிவித்துக் கொள்கிறோம். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் தலைவர்கள் போராடி பள்ளர் என்கிற பெயர் நீக்கப்பட்டு தேவேந்திரகுல வேளாளர் என்கிற பெயர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் தேவேந்திரகுல வேளாளர் மக்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு ஹிந்து- பள்ளன் என்று குறிப்பிட்டமைக்கு அமலாக்கத் துறையின் அதிகாரிகள் மீதும், அதற்கு துணை நிற்கின்ற பாரதிய ஜனதா நிர்வாகி குணசேகரன் மீதும் பட்டியல் சமூகத்திற்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கின்றோம்.
இதையும் படிங்க;- தமிழ்நாட்டுக்கு இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியதாக சொன்னீங்க! எவ்வளவு சொல்ல மறுக்கிறீங்க! ஜவாஹிருல்லா!
சட்ட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பட்டியல் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை ஒருங்கிணைத்து கடும் போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வடமாநிலங்களில் தொடர்ந்து பட்டியல் சமூகங்களை இழிவு படுத்தியும், கொலை செய்து வருவதும், அதற்கு துணையாக ஒன்றிய அரசின் துறைகளை வைத்துக்கொண்டு மிரட்டுவதுமாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி தற்போது அதே பாணியை தமிழகத்திலும் செயல்படுத்த முனைப்பு காட்டுகிறது. தேவேந்திர குல மக்களை வேளாளர் இழிவுபடுத்துவதை தொடர்ந்து வேடிக்கை பார்த்து வரும் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு அப்பாவி விவசாயிகள், பட்டியலின மக்களை மிரட்டி வரும் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என லெனின் கென்னடி தெரிவித்துள்ளார்.