சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு 50 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்குவதில் படுதீவிரமாக இருக்கிறது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இம்மாநிலங்களில் ஆளும் பாஜக அரசு வாக்காளர்களைக் கவருவதற்காக ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

மத்திய பிரதேச அரசு 55.5 லட்சம் ஸ்மார்ட் போன்களை வாங்க இருக்கிறது. இதற்காக சுமார் ரூ1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட் போனில் வால்பேப்பராக முதல்வர் ராமன் சிங் படம் இடம்பெற்றுள்ளது. மேலும் ராமன் சிங், பிரதமர் மோடியின் ஆப்ஸ்களும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 50.8 லட்சம் ஸ்மார்ட் போன்களும் 2019-ம் ஆண்டு 4.8 லட்சம் ஸ்மார்ட் போன்களும் வழங்கப்படும். மைக்ரோமேக்ஸ் போனில் ரிலையன்ஸ் ஜியோ சிம் போட்டே வழங்கப் போகிறதாம் மத்திய பிரதேச பாஜக அரசு.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமே மொபைல் போன் வழங்குவதாக அறிவித்தார். ஆனால் இந்த திட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் இது போன்ற மாஸ் முன்னோடி திட்டங்களை எப்படி செயல்படுத்தவேண்டும் என நமது  தமிழகத்தின் மரணிந்த முதல்வர் ஜெயலலிதா, குறிப்பாக  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு ஸ்கூட்டி , தாலிக்கு தங்கம் என ஏராளமான திட்டங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.

இதேபோன்று ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த அம்மா உணவகங்கள் ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்கள் பெரும்பாலும் தேர்தலை குறிவைத்து செயல்படுத்தப் பட்டாலும், ஏழை எளிய மக்களுக்கு அது பெரும் அளவில் பயன்பாட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த மாடலைப் பின்பற்றியே மத்திய பிரதேச அரசும் 55 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க திட்டம் போட்டுள்ளது.