மத்திய அரசின் கட்டளைப்படி அதிமுக அவையை முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அமைக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை தொடர்ந்து 11-வது நாளாக முடங்கப்பட்டு வருகிறது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பா.ஜ.க. கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி அதிரடியாக வெளியேறியது. 

இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே அதிமுக அவையை முடக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இதனிடையே அதிமுக எம்.பி.க்களை நேரில் சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டதாகவும் அவர்கள் ஆதரவு தர மறுத்து விட்டதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. வரபிரசாத ராவ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யவிடாமல் அதிமுக வேண்டும் என்றே அவையை முடக்குகிறது என சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ் புகார் தெரிவித்துள்ளார். 

மேலும் அதிமுக-வின் இந்த செயல் மத்திய அரசிற்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் குற்றசாட்டியுள்ளார்.