Asianet News TamilAsianet News Tamil

அஸ்ஸாமில் பாஜக; கேரளாவில் இடதுசாரி ஆட்சி.. புதுச்சேரியில் ரங்கசாமி கையில் முடிவு.. கருத்துக்கணிப்பு பரபர .!

அஸ்ஸாம், கேரளாவில் ஆளுங்கட்சிகள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும், புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது என்.ஆர். காங்கிரஸ் கையிலும் உள்ளது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

BJP in Assam; Left wing rule in Kerala.. Lagan in the hands of Rangasamy in Pondicherry.. Poll results.!
Author
Delhi, First Published Mar 8, 2021, 9:52 PM IST

அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.BJP in Assam; Left wing rule in Kerala.. Lagan in the hands of Rangasamy in Pondicherry.. Poll results.!
அஸ்ஸாமில் மொத்தம் உள்ளா 126 தொகுதிகளில் தே.ஜ.கூ. 67 தொகுதிகளில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கூட்டணி 57 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜகூ 42.2 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கூட்டணி 40.70 சதவீத வாக்குகளையும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.BJP in Assam; Left wing rule in Kerala.. Lagan in the hands of Rangasamy in Pondicherry.. Poll results.!
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 14 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், அது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு அனுகூலமாக முடியும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.BJP in Assam; Left wing rule in Kerala.. Lagan in the hands of Rangasamy in Pondicherry.. Poll results.!
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி 82 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கூட்டணி 56 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. பாஜக 1 தொகுதியில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி 43 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கூட்டணி 38 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios