Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலை பற்றி இழிவாக பேசினால் பதிலடி கொடுப்போம்.! அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு பாஜக பகிரங்க எச்சரிக்கை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து இழிவாக பேசினால் தக்க பதிலடி கொடும்போம் என  பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

BJP has warned that they will retaliate against the AIADMK if they talk disparagingly about Annamalai KAK
Author
First Published Sep 19, 2023, 8:07 AM IST

அதிமுக- பாஜக மோதல்

அதிமுக மூத்த தலைவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சரை ஊழல் குற்றவாளி என அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து அறிஞர் அண்ணா மண்ணிப்பு கேட்டதாக பேசியது மீண்டும் மோதல் போக்கை அதிகரிக்க செய்துள்ளது. இதனையடுத்து அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு அண்ணாமலையும் பதிலடி கொடுத்தார். நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக் கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிக்கட்சி, தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. அதற்காக பேச முடியவில்லை என்றால் நான் எதற்காக இந்த இருக்கையில் அமர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

BJP has warned that they will retaliate against the AIADMK if they talk disparagingly about Annamalai KAK

அதிமுக பாஜக கூட்டணி முறிவு

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லையென்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அண்ணாமலை கட்சிக்காக உழைக்கவில்லையென்றும், தன்னை வளர்த்துக்கொள்ளவே உழைப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் குறித்து இழிவாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  அ.தி.மு.கவை சார்ந்த திரு.ஜெயக்குமார்,திரு.C.V. சண்முகம் மற்றும் திரு.செல்லூர் கே.ராஜூ போன்றவர்கள் தொடர்ந்து நமது பாஜக மாநில தலைவர் திருஅண்ணாமலை அவர்களை பொதுவழியில் அவமரியாதையாக பேசிவருவது வன்மையாக கண்டிக்கதக்கது.

BJP has warned that they will retaliate against the AIADMK if they talk disparagingly about Annamalai KAK

பதிலடி கொடுப்போம்- பாஜக எச்சரிக்கை

மக்காளல் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் அரசியல் முதிர்ச்சி இன்றி,மூன்றாம் தர மோடை போச்சாளர்கள் போல அநாகரீகமாக பேசுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க வினர் கொண்ட கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்திட மாட்டோம். மக்களின் நலனுக்காகவே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியே தவிர 2024 பாராளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல.வரும் காலங்களிலும் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி இன்றி பா.ஜ.க தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கிற அறியாமையின்றி பேசுகிறார்கள்.

 

மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை அ.தி.மு.கவினர் தொடர்ந்து இழிவாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் அவர்களது பாணியில் தக்க பதிலடி கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.  பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் வலுத்துள்ளது.

இதையும் படியுங்கள்

நான் யாருடைய அடிமையும் கிடையாது... கும்பிடு போட்டுக் கொண்டு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை- சீறும் அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios