தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. திமுக, விசிகவின் கைக்கூலி காவல்துறையா ? கொந்தளித்த எச்.ராஜா !
கடந்த 30ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த 30ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது 50 ஆண்டு சுதந்திர தினம் வந்தபோது எல்.கே அத்வானி சுவர்ண ஜெயந்தி ரத யாத்திரையை நாடு முழுவதும் நடத்தினார். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். இப்போது 7-வது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கண்ல் கண்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரது வீட்டிற்கு போலீஸ் மிரட்டுவதற்கு சென்றது. ஆனால், நடராஜரை இழிவுபடுத்திப் பேசியவரின் வீட்டிற்கு பாதை தெரியவில்லையா ?
மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !
ஆண்டவரை இழிவுபடுத்தி பேசலாம், நேற்று பிறந்த மனிதனை இழிவுபடுத்தி பேசக்கூடாதா ? இதில் என்ன தவறு உள்ளது ? ஆண்டவர் நடராஜரை பற்றி இழிவாகப் பேசியவரை கைது செய்ய துப்பில்லாத திராணி இல்லாத தமிழக காவல்துறை கனல் கண்ணன் வீட்டிற்கு சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். ஒரு முட்டாள் தன் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டான். தமிழ்நாடு காவல்துறையின் தமிழக அரசின் அப்படித்தான் உள்ளது. போலி பாஸ்போர்ட் புகழ் டேவிட் ஆசீர்வாதம் கமிஷனராக இருந்தபோது அதிகமாக போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது.
இது தமிழக காவல்துறையின் பாரம்பரியம், தேச விரோதமாக நாட்டின் இறையாண்மைக்கு நாட்டு நலனுக்கு எதிராக செயல்படக்கூடிய அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நடிகரும் சினிமா சண்டை பயிற்சியாளருமான கணல் கண்ணன் என்பவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்று மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவருக்கு கருத்துரிமை கிடையாதா ? அவர் கருத்துரிமையை தடுப்பதற்கு டிஜிபி சைலேந்திரபாபு யார் ? டேவிட்சன் தேவாசீர்வாதம் யார் ? தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலுக்கு காரணம் காவல்துறையை முழுக்க முழுக்க திமுக மற்றும் வி.சிக கட்சிகளின் கைக்கூலிகளாக செயல்படுவதே காரணம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது.ஆயிரம் கனல் கண்ணன் கருத்து சொன்னால் தமிழகம் அரசு என்ன செய்யும் ? டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இவர்கள் யார் ஆசிர்வாதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை’ என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !