Asianet News TamilAsianet News Tamil

PFI-யை தடை செய்வதற்கான காரணத்தை பாஜக அரசு வெளியிட வேண்டும்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!!

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வதற்கான காரணத்தை பாஜக அரசு ஆதாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தமிழக காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

BJP govt should publish the reason for banning PFI says KS Alagiri
Author
First Published Sep 29, 2022, 12:00 AM IST

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வதற்கான காரணத்தை பாஜக அரசு ஆதாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தமிழக காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதனோடு சார்ந்திருக்க கூடிய  அமைப்புகளை இந்தியாவில் அடுத்து 5 ஆண்டுகளுக்கு தடை செய்திருக்கிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பின்புலம் என்ன? உண்மையிலேயே அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு இருக்கிறதா? என்பது தங்களுக்கு தெரியாது.

இதையும் படிங்க: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் கைது... அவரது கடையில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!

மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது அன்றைய உள்துறை அமைச்சர் பாட்டில் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வதற்கான காரணங்களை ஆதாரங்களோடு வெளியிட்டார். அதை போல இன்றைய பாரதிய ஜனதா அரசு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை இந்தியாவில் தடை செய்வதற்கான காரணத்தை ஆதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.

இதையும் படிங்க: பிஎப்ஐ, துணை அமைப்புகளின் இணையதளம், சமூக வலைத்தளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை குறித்து செய்திகளை ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிந்தது. ஜனநாயக நாட்டில் அது பற்றிய உண்மை செய்தியை அறிந்தால் தான், இது உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? அல்லது பாரதிய ஜனதா தனது அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்காக செய்கிறதா? என்பது தெரியவரும். காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை தேசவிரோத சக்திகளுக்கோ, வன்முறை சக்திகளுக்கோ துணை போகாது என்று தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios