Asianet News TamilAsianet News Tamil

பாஜக அரசு காஸ் சிலிண்டர் மானியம் வழங்கணும்.. திமுக அரசு பெட்ரோல். டீசல் விலையை குறைக்கணும்.. ராமதாஸ் அட்வைஸ்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ. 200 மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு பயனளிக்காது. 

BJP government extend gas cylinder subsidy .. DMK government reduce petrol, diesel prices .. Ramadas Advice!
Author
Chennai, First Published May 22, 2022, 8:56 PM IST

சமையல் எரிவாயு மானியம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என்றும் பாமக நிற்வனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல். டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் பெட்ரோல் விலையை ரூ. 8, டீசல் விலையை ரூ.6 மத்திய அரசு குறைத்தது. இதேபோல ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் உஜ்வலா திட்டத்தில் வழங்கும் காஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முன் வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

BJP government extend gas cylinder subsidy .. DMK government reduce petrol, diesel prices .. Ramadas Advice!

அதில், “பெட்ரோல் மீது ரூ. 8, டீசல் மீது ரூ. 6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ. 200 மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு பயனளிக்காது. சமையல் எரிவாயு மானியம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கான உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் எண்ணிக்கை 9 கோடி மட்டுமே. மொத்தமுள்ள 30 கோடி எரிவாயு இணைப்புகளில் 22 கோடி இணைப்புகளுக்கு இந்த மானியம் கிடைக்காது.

BJP government extend gas cylinder subsidy .. DMK government reduce petrol, diesel prices .. Ramadas Advice!

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மட்டுமின்றி, ஏழை & நடுத்தர மக்களாலும் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது. அந்தக் குடும்பங்களுக்கும் எரிவாயு மானியத்தை நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆகும் செலவு அதிகமாக இருக்காது. அதனால், எரிவாயு மானியத்தை நீட்டிக்க வேண்டும். மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால், மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை போக்க முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios