நடிகர் விஜய் படங்களை தான் பார்த்து ரசித்தாலும் அனுஷ்காவின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு என தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆனால் என் மகன் விஜய் ஃபேன் என்றும் கூறியுள்ளார், விஜய்க்கு எதிரான பாஜகவின் முன்னணி தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் வானிதியின்  இக் கருத்து பாஜக தொண்டர்கள் மத்தியில்  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராகி உள்ள நிலையில் தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா,  முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்,  பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன்,  தமிழக பாஜகவின் மாநிலசெயலார்  ராகவன், மற்றும்  தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்  உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் தமிழிசைக்கு இணையாக கடுமையாக  உழைக்கக்கூடிய  ஒர் தலைவரை நியமிக்க வேண்டும்,  குறிப்பாக ஒரு பெண் தலைவரை நியமிக்கவேண்டும் என தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  மீண்டும் ஒரு பெண் தலைவர் என்றால் அது வானதி சீனிவாசனாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந் நிலையில் தொலைக்காட்சி  ஒன்றிற்கு தன் கணவர் சீனிவாசனுடன் இணைந்து  வானதி பேட்டி கொடுத்துள்ளார். தான் அரசியலில் சந்தித்த சவால்களை அதில் அவர்  பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடன் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் யார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு , தனக்கு பிடித்த அரசியல் தலைவர் என்று  ஒருவரை மட்டும் குறிப்பிட்டு கூற முடியாது.

 

பல அரசியல் தலைவர்களிடம் அரசியல் பேசுவது வழக்கம்,  குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார், மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோருடன் உரையாடுவது வழக்கம் உள்ளது என்றார், விஜய் ரசிகர் என்று தங்களை கூறுகிறார்களே என்று செய்தியார் கேட்டதற்கு, விஜய்க்கு ஃபேன் என்று சொல்லமுடியாது, அவரது படங்களை ரசித்து பார்ப்போன் என்றார்,

ஆனால் என் மூத்தனுக்கு  மகனுக்கு நடிகர் விஜய்யை பிடிக்கும், அவன் விஜய் ஃபேன் என்று அவர் கூறினார். கதாநாயகிகளை பொறுத்த மட்டில் அனுஷ்கா மீதி ஒரு ஈர்ப்பு உண்டு என்று கூறிய வானதி அந்தப்போட்டியில் தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை  மனம் நிறந்து பகிர்ந்துகொண்டார்.