இந்துக்களை இழிவுப்படுத்தும் புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்..! உடனடியாக கைது செய்ய வேண்டும் - பாஜக
ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டு, பொது வெளியில் விநியோகம் செய்யும் திருமாவளவனை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சரை பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்
மனுஸ்மிருதி பிரதி வழங்கிய திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரம் பேருக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கினார். இதே போன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்தவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக புத்தகங்களை விநியோகம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 1927ல் டிசம்பர் மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் மனுஸர் நூலை எரித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மனுஸ்மருதி அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. குடும்ப நிகழ்வுகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், ஈம சடங்குகள் என அனைத்தும் நடைப்பெற்று வருகிறது. பெண்கள் சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிரிதியின் வழிகாட்டுதல். ஆர் எஸ் எஸ் யின் கொள்கை மனுஸ்மிருதி புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என விமர்சித்திருந்தார்.
இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ன் குழந்தை ஆட்சி
இந்தநிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி, ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டு பொது வெளியில் விநியோகம் செய்யும் திருமாவளவனை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், ஆர்.எஸ்.எஸ். பேரணியை தான் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். மக்கள் புரிந்துக் கொண்டால் ஆர்எஸ்எஸ் இந்தியாவிலேயே இருக்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் புரிந்து கொண்டதால் தான் ஆர் எஸ் எஸ்ன் குழந்தையான பா ஜ கவின் ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.
சொந்த சின்னத்தில் போட்டியிட அச்சம்
வி சி க, எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டதால் தான் சொந்த சின்னத்தில் போட்டியிட அச்சப்பட்டு தி மு க வின் சின்னத்தில் போட்டியிட்டது, தட்டுத்தடுமாறி தி மு கவின் தயவோடு உங்களால் பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது. தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தினால், வி சி க அரசியலிலேயே இருக்க முடியாது என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி