இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன? அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும் என மனித மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
கோவை கார் வெடி விபத்து
கோவை உக்கடத்தில் கடந்த 23 ஆம் தேதி கோவை கார் வெடி விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் ஜமீஷா முபீன் என்பவர் உயிர் இழந்தார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவரது வீட்டில் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஒரு தீவிரவாத சம்பவம் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் கைது செய்யதனர். இந்தநிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கோவை கார் வெடி விபத்து தொடர்பாக ஆலோசித்தார். கோவையில் பதற்றமான சூழ்நிலையில் பகுதியில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தாக்குதலுக்கு பின்னனி யார்.?
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு அந்த பகுதி மக்கள் மிகுந்த பாதிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து சகஜ நிலை திரும்ப சில ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார். தற்போது மீண்டும் அதே போன்று சம்பவம் நிகழ இருந்ததாக தெரிவித்துள்ளார். கோவை மாநகரில் அமைதி நிலைநாட்டுவது அனைவரின் கடமை. இனி இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெற கூடாது. இதன் கவலைகளை ஆணையாளரிடம் பகிர்ந்து கொண்டதாக கூறினார். கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதல் என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன? அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியோடு இந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக கூறினார்.
பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி வழங்கிய விவகாரம்... விசிகவினர் 12 பேர் கைது!!
உளவியல் கவுன்சிலிங்
அதே நேரத்தில் கோவை கார் வெடி விபத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற நிலையில் பின்னணியும் ஆராய வேண்டும் என வலியுறுத்தினார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களாலும், இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது என குற்றப்சாட்டினார். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பான முறையில் விசாரணை செய்ய வேண்டும். அதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க உள்ளதாக காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தன்னிடம் தெரிவித்ததாக ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்