வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலில்  அதிமுக – பாமக இடையே தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டது.

இதே போல் அதிமுக-பாஜக இடையேயும் இன்று  கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் அதிமுக – பாஜக இடையே ஒப்பந்தம்  ஏற்பட்டது, பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள் எவை என அறிவிக்கப்படவில்லை.


ஆனால் தற்போது  தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்தும், யார் யார் போட்டியிட உள்ளார்கள் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி திருச்சியில் தமிழிசையும், கன்னியாகுமரியில் பொன்,ராதாகிருஷ்ணனும், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும்  போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.