ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தே தீரும் என தமிழகத்திலுள்ள மடாதிபதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் பட்டினப்பிரவேசம் நடக்குமென இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது, இந்நிலையில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி அமைதியான முறையில் நடந்துள்ளது.

தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் விவகாரத்தில் முதல்வர் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் என்றும் அடுத்த ஆண்டு தடை விதிக்கட்டும் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலை துறை சார்பில் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இதேபோல் தர்மபுர ஆதீனம் பல்லக்குத் தூக்கும் பட்டின பிரவேசம் என்ற நிகழ்ச்சிக்கு அரசு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது, திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனிதனை மனிதனே பல்லக்கு தூக்குவது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு, பல்லக்கில் செல்பவர் புண்ணியம் செய்தவர்கள் என்றும் பல்லக்கை தூக்குபவர்கள் பாவிகள் என்றும் அது ஏற்றத் தாழ்வு போதிக்கிறது என திராவிட கழகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தே தீரும் என தமிழகத்திலுள்ள மடாதிபதிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் பட்டினப்பிரவேசம் நடக்குமென இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது, இந்நிலையில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி அமைதியான முறையில் நடந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் வேல்முருகன் தர்மபுர ஆதீனம் விவகாரத்தில் முதலமைச்சர் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார். பட்டின பிரவேசத்திற்கு தடை என்ற அவரது முயற்சிக்கு இந்து இயக்கம் மற்றும் பாஜகவினர் பயத்தை கொடுத்து விட்டனர். முதலமைச்சர் பயந்து பின்வாங்கி விட்டார். இந்த ஆண்டு மட்டும் தான் தடையை நீக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். வேண்டும் என்றால் அடுத்த வருடம் தடுத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று பாரக்கலாம் என முருகன் தமிழக அரசுக்கு சவால் விடுத்தார். 

இன்று சென்னை துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் சுமார் 98 கோடி ரூபாய் செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது என்றார். கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார், அதில் ஐந்து துறைமுகங்களை நவீன படுத்துவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். சென்னை விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மீன்பிடித்துறை முகங்கள் நவீனப்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது என்றார். சர்வதேச தரத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் 98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த உள்ளோம் என்றார்.