BJP cadres chant Modi Modi at Yeddyurappa swearing in

கர்நாடகத்தின் 23வது முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றபோது எதற்காக பச்சை துண்டு அணிந்திருந்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழம்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக்க எடியூரப்பா பதவி ஏற்கிறார். பிஜேபி கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பிஜேபி கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். மாறாக 78 இடங்களில் கைப்பற்றிய காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது ஆனால் ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்.

ராஜ்பவனில் நடைபெற்ற கோலாகல தொடங்கிய விழாவில், இன்று காலை 9 மணிக்கு பி.எஸ். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்த பதவிப் பிரமாணத்தின் போது அவர் பச்சை நிறத் துண்டை போட்டிருந்தார்.

அவர் பிஜேபி முதல்வர், ஆர்.எஸ்.எஸில் இருந்தவர். காவி நிறத்தை விட்டுவிட்டு ஏன்? பச்சை நிற துண்டை போட்டார் என்பதற்கு காரணம் தெரிந்துள்ளது.

அவர் பதவியேற்கும் போது கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் உறுதி மொழி ஏற்றார். எடியூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த எடியூரப்பா, விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடித்தினர். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ரூ. 1 லட்சம் கோடி விவசாயிகளின் கடனை மொத்தமாக தள்ளுபடி செய்வோம் என விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுப்படுத்தும் வகையிலேயே அவர் பச்சை துண்டு அணிந்து வந்து கோப்பில் முதல் கையெழுத்திட்டார். 

இதுபற்றி, எடியூரப்பா தனது இணையதளத்தில், கடந்த 45 ஆண்டுகளாக, இன்று வரை நான் தினமும் விவசாய நிலத்துக்கு செல்வேன். எங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எனது சொந்த ஊரான ஷிகாரிபுராவுக்கு சென்றால் என்னுடைய வயலில் சிறிது நேரம் இருந்துவிட்டுதான் திரும்புவேன். நானும் எனது மகனும் சேர்ந்தே விவசாயத்தை பார்த்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். மேலும் 2008-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா அன்றும் பச்சை துண்டு போட்டுக்கொண்டே பதவியேற்றார்.

அதுபோல், இன்று விவசாயிகள் மற்றும் கடவுளின் பெயரால் பதவியேற்றார். மேலும் விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட்டை முதலில் அமைத்தது எடியூரப்பா என்பது தான் இதில் ஸ்பெஷல்.