உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில்  பாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்கு தெரியவந்துள்ளது என கிண்டல் செய்துள்ளார்.

மோடியை போலவே தங்களது கணவர்களும் நம்மை கைவிட்டு ஓடிப் போவார்களோ? என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.அரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார்? என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் மோடியை போன்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இதுவே மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்கின்ற மரியாதையாக இருக்கும் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.