Asianet News TamilAsianet News Tamil

பாஜகவை கிழி கிழியென கிழித்துத் தொங்கவிட்ட நமது அம்மா.. அதிமுகவின் அடேங்கப்பா துணிச்சல்..!

இது பாஜக ஆட்சியைப் பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்யாமல் அடக்கி வாசித்து வந்த அதிமுக முதன் முறையாக கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் நோக்கர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

BJP Attack...namadhu amma news paper
Author
Chennai, First Published Dec 12, 2018, 3:53 PM IST

ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு புலி இளைத்தால் எலி எகிற கதையாகி விட்டது பாஜகவின் நிலை. பாஜகவின் அடிமையாக அதிமுக ஆட்சியை எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர். அப்படிப்பட்ட ஆட்சியை நடத்தி வரும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதளான நமது அம்மா நாளிதழ் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து கவிதை வெளியிட்டுள்ளது. BJP Attack...namadhu amma news paper

இது பாஜக ஆட்சியைப் பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்யாமல் அடக்கி வாசித்து வந்த அதிமுக முதன் முறையாக கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் நோக்கர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ’அதிர்ச்சியும்... மகிழ்ச்சியும்...’ என்கிற தலைப்பில் சித்ரகுப்தன் எழுதிய அந்தக் கவிதையில், ’’ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி தந்திருக்கு... அதல பாதாளத்தில் கிடக்கும் காங்கிரசுக்கோ அளவில்லா மகிழ்ச்சி தந்திருக்கு... மிசோரம் தேசிய முன்னணி, தெலங்கானா ராஷ்ட்ரிய  சமீதி கட்சிகளுக்கு மாநில கட்சிகளின் மகத்துவத்தை உணர்த்திய மிடுக்கான எழுச்சி தந்திருக்கு... இது அடுத்து வரவிருக்கும் பாரததேசத்தின் பதினேழாவது மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையுமா? BJP Attack...namadhu amma news paper

இல்லை தவறுகளை திருத்தி தங்களை வெற்றிப்பாதைக்கு திருப்பிக் கொள்ள சரிவை சந்தித்தவர்களுக்கு சந்தர்ப்பமாக மாறுமா? இதுபோல ஆளுக்கொரு பக்கம் அலசல்கள் வீதிக்கு வீதி விமர்சனங்கள்.. ஆனாலும், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதாக ஒளிவட்டம் வரைந்து கொண்டு அதிகார பரிவட்டம் கட்டிக்கொள்ள ஆவல் கொண்டவர்கள் ஐந்து மாநிலத்தை வழி நடத்தும் தலைமையை தேர்வு செய்யும் முடிவே தவிர, தேசத்தின் ஆள்வோரை தேர்ந்தெடுக்கும் தீர்ப்பல்ல என்பதாக தத்துவார்த்தம் பேசி தப்பிக்கக் கூடாது. 

பண மதிப்பின்மை ஏற்படுத்திய பாதிப்புகள்... முறையாக அலசி ஆராய்ந்து முன் வைக்கப்படாத அவசர ஜி.எஸ்.டியால் எழுந்த ஆவேசக் கோபங்கள்... வரலாறு காணாத அளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை. வெகுவாக சரிவுற்ற நிலையிலும் தொடரும் எரிபொருள் விலையேற்றம்.. இந்திய பணத்தின் வீழ்ச்சி.. இப்படியாக வெள்ளந்தி சனங்களில் விழி நீர் கசிவுகளே இப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தரப்பட்டிருக்கும் பதிலாக இருக்கிறது என்பதை உரியவர்கள் ஏற்றுக் கொண்டு உடனடித் தீர்வுக்கு வழி கண்டால் இன்றைய கசந்த காலம் நாளை வசந்த காலமாகவும் மாறலாம் தானே..’’ என முடிகிறது அந்தக் கவிதை. BJP Attack...namadhu amma news paper

அதிமுக நாளேட்டில் பாஜகவை விமர்சித்து இப்படியொரு கவிதையா? என வியக்கும் அரசியல் நோக்கர்கள், பாஜக மீதுள்ள கசப்பை இப்போது வெளிப்படுத்த அதிமுக தொடங்கி இருக்கிறது. பாஜக உறவை அதிமுக விரும்பவில்லை என இந்தக் கவிதை உணர்த்துவதாக கூறுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios