தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில அரசு பெயரளவுக்கு மட்டுமே விவசாயத்துக்காக தனியாக பட்ஜெட் போடுகிறது. மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. மத்திய அரசு மீது மாநில அரசு புகார் கூறுவதை தவிர்த்துவிட்டு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

பரத நாட்டிய கலைஞர் ஜாகிர்உசேன் விஷயத்தில் இந்து சமய அறநிலையத் துறை நாடகமாடுகிறது. யாரெல்லாம் கடவுளை நம்பி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையின் அடிப்படையில் கோயிலில் நிச்சயம் இடம் உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு காவல் துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் காவல் துறை தலைவரை முதல் ஆளாய் வரவேற்பது பாஜகதான்

தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களில் நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் பெறுகிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்யும்போது 4% கமிஷனை பெறுகிறார்கள். தமிழகத்தில் ஒரு குடும்பமே ஆட்சி செய்து வருகிறது. வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர் என ஒருவரும் திமுக களத்தில் பணி செய்வது இல்லை.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் தமிழக மக்கள் பேசத் தொடங்குவார்கள் என்ற அவர், தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அப்படியே காப்பி எடுத்து அவற்றை மாநில அரசு திட்டம் என்ற பெயரில் புதிய வடிவில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்துவதற்கான திறன் இருப்பதாக தெரியவில்லை என அவர் குறை கூறினார்.

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடு தோறும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தி வரும் திட்டத்திலும் தமிழகத்தில் திமுக கரப்ஷன் செய்கிறது. தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்குவதற்காக உரிமத்தை பெறுவதிலும் கரப்ஷன் முட்டுக்கட்டை இடுகிறது, இதை எல்லாம் தவிர்த்தால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும்'' என அவர் தெரிவித்தார்.