Asianet News TamilAsianet News Tamil

ஸ்கெட்ச் போடும் பிஜேபி... ஐஸ் வைக்கும் அதிமுக!! சிக்குவாரா அழகிரி?

கலைஞருக்காக அழகிரி நடத்திய பேரணி குறித்து ஊடகங்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு எதுவும் அந்த பேரணியின் போது நடக்கவில்லை. பேரணியின் முடிவிலாவது அழகிரி ஏதாவது காராசாரமாக பேசுவார் என எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்குமே பெருத்த ஏமாற்றம் தான். 

BJP and ADMK target Azagiri
Author
Chennai, First Published Sep 10, 2018, 11:38 AM IST

கலைஞருக்காக அழகிரி நடத்திய பேரணி குறித்து ஊடகங்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு எதுவும் அந்த பேரணியின் போது நடக்கவில்லை. பேரணியின் முடிவிலாவது அழகிரி ஏதாவது காராசாரமாக பேசுவார் என எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்குமே பெருத்த ஏமாற்றம் தான்.

 BJP and ADMK target Azagiri

மேலும் ஊடகங்கள் மத்தியில் அழகிரி நடத்திய இந்த பேரணி குறித்து பரபரப்பான செய்திகள் எதுவும் அதிகம் வராததால் இந்த பேரணியை ஒரு தோல்வி என்றே கூறுகின்றனர் அழகிரிக்கு எதிரானவர்கள். ஆனால் பிறர் தோல்வி என கருதும் இந்த பேரணியே தற்போது அழகிரிக்கு சாதகமான அரசியல் சூழலை ஒரு பக்கம் உருவாக்கி இருக்கிறது.

ஆரம்பம் முதலே திமுகவில் இருந்து தனக்கான வரவேற்பு சரிவர கிடைக்கவில்லை என்பதனால் தான் தொடர்ந்து இவ்வாறு குடைச்சல் கொடுத்து வந்தார் அழகிரி. இந்த பேரணிக்கு பிறகாவது திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்து கொள்வார்கள் என்பது தான் அவரது எதிர்பார்ப்பு.. அதனால் தான் பேரணி முடிவின் போது கூட அடக்கி வாசித்தார். 

ஆனால் திமுக தரப்போ இந்த விஷயத்தில் தன் நிலைப்பாட்டை மற்றிக்கொள்வதாகவே இல்லை. ஆனால் அழகிரிக்கு எதிர்பாராத விதமாக பாஜக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து ஆதரவு குரல் எழுந்திருக்கிறது. அழகிரியின் பேரணி குறித்து திமுக வாய்திறக்காத போது பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் "அழகிரி நடத்திய பேரணி மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடிகோலாக உள்ளது” என மிகைப்படுத்தி கூறி இருக்கிறார். அதே சமயம் “ எந்த கட்சியையும் உடைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை” என்று கூறி தங்கள் மறைமுக நோக்கம் என்ன என்பதையும் வெளிக்காட்டிவிட்டார்.

 BJP and ADMK target Azagiri

இதனால் பாஜக தரப்பில் அழகிரிக்கு இருக்கு ஆதரவு  ஒரு பக்கம் தெரியவந்திருக்கிறது. அதே சமயம் அதிமுகவும் அழகிரியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான எண்ணத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் தரப்பில் வெளிவந்திருக்கும் பேட்டிகள் வெளிக்காட்டி இருக்கின்றன. மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை அழகிரியின் பேரணி கூறித்து பேசுகையில் , அழகிரியின் பேரணி ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என்பதனால் தான், திமுக மற்றும் பாஜக சேர்ந்து சிபிஐ ரெய்டு நடத்தி ,ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி இருக்கின்றன என தெரிவித்திருக்கிறார். 

இதில் தங்களுக்கு எதிராக நடந்த இந்த ரெய்டுக்கு காரணம் என்ன என  விளக்கம் கூறி எஸ்கேப் ஆகி இருக்கும் தம்பி துரை, இன்னொரு பக்கம் அழகிரிக்கு சாதகமாகவும் பேசி, அவருக்கு கொக்கி போடவும் செய்திருக்கிறார். அதே போல செல்லூர் ராஜுவும், "பல வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்தாலும், மிகப்பெரிய கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ளார் அழகிரி. பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி உள்ளார்" என அழகிரியை எக்கச்சக்கமாக புகழ்ந்திருக்கிறார். BJP and ADMK target Azagiri

மொத்தத்தில் பாஜக ஒருபக்கமும், அதிமுக ஒரு பக்கமும் அழகிரிக்கு வரவேற்பு தர தயாராக இருக்கின்றனர் என்பதையே உணர்த்துகிறது, இந்த மூவரும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள். ஆனால் இதன் உள்நோக்கமெல்லாம், திமுக எனும் கட்சியை உடைப்பதும், அழகிரியின் வசம் இருக்கும் தொண்டர்களை தங்கள் வசம் சேர்த்துகொள்ளவும் தான் என்பதை அழகிரி அறிந்திருக்கிறாரா? என்பது தான் தெரியவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios