BJP almost get majarity in karnataka

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால்,அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. மற்ற கட்சிகளின் உதவி இல்லாமல் பாஜக ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு, நிமிடம் மாறிக்கொண்டே உள்ளது.

இதனால், எந்த கட்சி பெரும்பான்மை பெறும் என்பதை கணிக்க முடியாத நிலையே உள்ளது. முன்னிலை நிலவரம் தெரிய வந்த 222 தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையும் 119 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையும் வகிக்கின்றன. ஜேடிஎஸ் 42 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 

அதே நேரத்தில் முழுமையாக வாக்குகள் எண்ணி முடிக்கும் நிலையில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூரில் பாஜகவினர் வெற்றியை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.