Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் பறவை காய்ச்சல்.. தொற்றுக்கு ஆளான பறவைகளை அழிக்க உத்தரவு. குமரி மாவட்டத்தில் தடுப்பு பணி தீவிரம்.

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவுவது வழக்கம். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான கோழிகளை ‌கேரள சுகாதாரத்துறையினர் அழித்து நோய் பரவல் அதிகரிக்காத வண்ணம்  தடுத்து வருகின்றனர்.

Bird flu in Kerala .. Order to destroy infected birds. Intensity of preventive work in Kumari district.
Author
Chennai, First Published Jan 6, 2021, 10:23 AM IST

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக குமரி மாவட்டத்தில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லை பகுதியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கால்நடைத்துறையினர் கிருமி நாசினி தெளித்து குமரி மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். 

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவுவது வழக்கம். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான கோழிகளை ‌கேரள சுகாதாரத்துறையினர் அழித்து நோய் பரவல் அதிகரிக்காத வண்ணம்  தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வளர்ப்பு  பறவைகளான வாத்து, கோழி உட்பட அனைத்து விதமான பறவைகள் கடந்த ஒருசில வாரங்களாக நோய் வாய்ப்பட்டு இறந்து வருகின்றன. 

Bird flu in Kerala .. Order to destroy infected birds. Intensity of preventive work in Kumari district.

இதனையடுத்து கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் பறவைகளின் இறப்புக்கு காரணம் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் இந்த பறவைகளுக்கு பறவை   காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கேரள அரசு பாதிக்கபட்ட சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகளை அழிக்க உத்தரவிட்டனர்.  இதனையடுத்து இந்த நோய் தொற்று  கேரள எல்லையை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் பரவக்கூடும் என்பதால் தொற்று பரவாமல் தடுக்க தமிழக கேரள எல்லை பகுதியான படந்தாலுமூடு பகுதியில் கால்நடைத்துறையினர் முகாம் அமைத்து நோய்தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Bird flu in Kerala .. Order to destroy infected birds. Intensity of preventive work in Kumari district.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மேலும் கேரளாவில் இருந்து கோழித்தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios