சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது. 

ஆனால்,சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வருகை தந்துள்ளார். திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் சபரிமலை செல்வதற்காக கேரளாவைச் சேர்ந்த பிந்து இன்று எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது பக்தர்கள் அவரை தடுத்து நிறுத்தியோதோடு மட்டுமல்லாமல் அவர் மிளகாய் பொடியைத் தூவி அடித்து விரட்டினர்.

ஆனால் பிந்து மிளகாய் பொடி தூயவர்கள் மீது தானும் மிளகாள் பொடியை தூவி எதிர் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் அவரை மீட்டு அழைத்துச் சென்றது. கடந்த ஆண்டு பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் சபரிமலை சென்றதற்காக பக்தர்களால் தாக்கப்பட்டனர் என்பது குறப்பிடத்தக்கது.