கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள. அதாவது இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன.

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் , எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.

குறிப்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், அங்கு வசிக்கும் மக்களையும் நேரில் சந்தித்து வருகிறார். இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான  குடும்பங்களை சந்தித்துள்ளதாக தெரிகிறது. 

தொடர்ந்து  மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கும், அங்குள்ள மக்களையும் சந்தித்து  பேசி வருகிறார். மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களையும் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் தலைநகர் திருவனந்தபுரம் செல்லாமல் கொச்சியிலேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திந்தித்து வருவதோடு, உடனயாக அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க  உத்தரவிட்டு வருகிறார்.

அவர் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும்போதும் எதிர்க்கட்சியினரையும் உடன் அழைத்துச் செல்கிறார். அவர்களிடமும் நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்கிறார். தனது உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாது தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடையே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவவும் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கலாம் என்று  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.