Bihar chief minister Nithishkumar met karunanidhi and convey birthday greetings

கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாளையொட்டி பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைர விழா நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அவருக்கு குடியரசுத் தலைவர், சோனியா காந்தி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டை YMCA வளாகத்தில் கருணாநிதிக்கு மிகப் பிரமாண்ட விழா நடத்தப்பட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதீஷ்குமார், சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.

இதைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.