பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையே பிரச்சினையை ஏற்படுத்த வண்ணம் நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் சர்ச்சை பதிவை போட்டுள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.  உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி தொடர்பாக வழங்கிய தீர்ப்பு குறித்து விமர்சித்து பேசினார். 

அதில்,  அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது என சுட்டிக் காட்டியவர்கள் மசூதிக்கு கீழே ஒரு கட்டமைப்பு  இருந்ததாக கூறுகின்றனர்,  ஆனால் அந்தக் கட்டமைப்பை  வைத்து அங்கு என்ன  இருந்தது   என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.  ஆனால் அந்தக் கட்டமைப்பை வைத்து அங்கு என்ன இருந்தது என்பதை அறியலாம் என்ற திருமாவளவன்,  குவிவடிவில் இருந்தால் அது மசூதி என்றும்,   கூம்பு போல இருந்தால் அது தேவாலயம் என்றும்,  அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இது கட்டிடம் என்றும் தொல் திருமாவளவன் பேசினார்.  அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.  இதனையடுத்தே பாஜக ஆதரவாளரும்,   பிக்பாஸ் வீட்டில் தனது டெர்ரர் முகத்தை காட்டி புகழ்பெற்ற  காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

அதில்,  திருமாவளவனை எங்குபார்த்தாலும் அடியுங்கள்,  என பதிவிட்டிருந்தார். திருமாவளவன் இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தும்,  தொடர்ந்து காயத்ரி வெறுப்பு கருத்தை பதிவிட்டுவருவது  சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அமைப்பினர் காயத்ரியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந் நிலையில் இது குறித்து தன் ஆதங்கத்தை பதிவு செய்துள்ள அவர்,  மீண்டும் தனது ட்விட்டரில் சர்ச்சை கருத்தைப் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்,  இந்த பிரச்சினையில் டாக்டர் ராமதாஸ் எனக்கு ஆதரவு தருவார் என நம்புகிறேன்.  இது போன்ற நபர்களை அடக்குவதற்கு சரியான நபர் ராமதாஸ் தான் என்றும்,   விடுதலை சிறுத்தைகளுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவிப்பார் என நம்புகிறேன் என்ன ஒரு பதிவிட்டு இருந்தார்.

 

விடுதலை சிறுத்தைகளுக்கும் , பாமகவுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்து பதிவிட்டு இருந்ததை பலர் கண்டித்தனர்.   இந்நிலையில் அவர் வரம்பு மீறி கருத்துக்களை பதிவிட்டுவருகிறார் என்ற  காரணத்திற்காக அவரது ட்விட்டர் பக்கமும் தற்போது  முடக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.