பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினின் காதல் லீலைகள் கள்ளக்காதலை தூண்டும் வகையில் உள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா குற்றம் சாட்டியுள்ளார், இந்நிகழ்ச்சியை பார்க்கும் பதின்பருவத்தினரை தவறாக வழிநடத்தவும் வாய்ப்பு உள்ளது என அச்சம் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ், பார்ட் 1 , பார்ட் 2 வை கடந்து பார்ட் 3  ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் இந் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக இருந்து வருகின்றனர்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிகழ்ச்சியை ரசித்து வரும் நிலையில் இது சமூகத்தில் மிகப்பெரிய கலாச்சார சீரழிவை அது ஏற்படுத்துகிறது என ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து போராடிவரும்  ராஜேஸ்வரி பிரியா தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், அதில் பேசும் அவர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் உடுத்தும் உடை அவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களின் உடல் மொழிகள் அந்நிகழ்ச்சியை பார்க்கும் இளம் தலைமுறையினர் மத்தியில்  இச்சமூகத்தைப் பற்றி தவறான புரிதலையே ஏற்படுத்தும் என்றார்.

ஒருபோதும்  சமூகத்தை நல்வழி படுத்தாது என்றும்  குற்றஞ்சாட்டினார். சாதாரணமாக ஒரு திரைப்படம் திரையில் வெளியிடப்பட வேண்டும் என்றாலும் கூட,  அது பலமுறை தணிக்கை செய்யப்பட்டு, தகுந்த சான்று பெற்ற பின்னரே அது  திரையிடப்படுகிறது , ஆனால் பல லட்சம் பார்வையாளர்களை  கொண்டுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்தவித தணிக்கையோ, வரன் முறையோ இல்லாமல்  இந் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது மிகவும் அபத்தம் என்றார்.  காதல் என்ற உணர்வுபூர்வமான விஷயத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளர் கவின் கேலிக்கூத்தாக்கி இருப்பதாகவும், ஒரு பெண் போனால் இன்னொரு பெண் என  வீட்டில் உள்ள பெண்களுடன் காதல் நாடகம் நடத்துவது சமூகத்தில் கள்ளக்காதலை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

  

இந் நிகழ்ச்சியை பார்க்கவேண்டும் என  யாரும் யாரையும்  நிர்பந்தப் படுத்தாதபோது, விருப்பாதவர்கள் அதைப்  தவிர்க்கலாம் என சிலர் கூறுகின்றனர்.  வயதில் மூத்தவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், இளம் வயதினர் குறிப்பாக பதின்  பருவத்தினர் நிகழ்ச்சியை பார்க்கும் போது அது அவர்களை தவறான வழிநடத்துமோ என்ற  அச்சம் எழுகிறது. அதனால் தான் எச்சரிக்கிறோம் அதங்கப்படுகிறோம் என்றார். எனவே இந்நிகழ்ச்சியை தணிக்கை செய்ய வேண்டும் அல்லது முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று என்னை போன்ற சமூக அக்கறையுள்ளவர்கள் போராடுகின்றோம் என்றார் ராஜேஸ்வரி. இந்த பிக்பாஸ் மிடியும் நிலையில் இருந்தாலும் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நிச்சயம் எதிர்ப்போன் என்று குரல் கொடுத்துள்ளார்.