Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலையில் இருந்து சைக்கிளில் அமெரிக்கா செல்ல தயார்.... அலறவிட்ட அமைச்சர்!

அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம், ஆனால் ரோடு இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் விதமாக திருவண்ணமலையில் 3-வது நாளாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Bicycle Ready to go America; R. B. Udhaya Kumar
Author
Thiruvannamalai, First Published Aug 27, 2018, 5:41 PM IST

அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம், ஆனால் ரோடு இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் விதமாக திருவண்ணமலையில் 3-வது நாளாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், .அதிமுக மாவட்டச்செயலர் பெருமாள் நகர் ராஜன், கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 Bicycle Ready to go America; R. B. Udhaya Kumar

அதன் பின்னர் ரூ.1.50 கோடி மதிப்பிலான மகளிருக்கு இலவச இருசக்கர வாகனங்கள், பிரதம மந்திரி திட்டத்தில் இலவச வீடு கட்ட ஆணை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். Bicycle Ready to go America; R. B. Udhaya Kumar

பிறகு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது, 10,000 கிலோமீட்டரில் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லலாம். அப்போ, அண்ணே அமெரிக்கா போவாமான்னு கேட்டுவிடாதீர்கள்’ ஏனெனில் அமெரிக்காவுக்கு செல்ல ரோடு இல்லை. ரோடு இருந்தால் நாம் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்று கூறினார். Bicycle Ready to go America; R. B. Udhaya Kumar

வேண்டுமென்றால் கப்பலில் சைக்கிளை ஏற்றி, அமெரிக்காவில் இறக்குவோம். அம்மாவின் அரசு சாதனைகள் குறித்து அமெரிக்காவில் சொல்வதற்கு முதல்வர் உத்தரவிட்டால் திருவண்ணாமலையில் இருந்து அமெரிக்கா செல்ல தயாராக உள்ளோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அமைச்சரகளின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios