மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து திமுக பணியாற்றும் என அறிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாகி உள்ளது.

 

இது திராவிட அரசியலுக்கு விழுந்த முதல் அடி. பெரும் தலைவர்களான பெரியார் அண்ணா வகுத்த வழியை நம்பாமல் யாரையோ நம்பி பணத்தை இறைத்து ஜெயித்து விடலாம் என நினைக்க வைத்துள்ளார் ஒரு மனிதன். 20 கட்சி கூட்டணி, 50 வருட பாரம்பரிய கட்சி திமுக. இது ஒரு எக்கு கோட்டை யாராலும் அசைக்க முடியாது என முழங்கி வந்த உடன்பிறப்புகளுக்கா இந்த நிலைமை?

 

ஸ்டாலின் தன்னை நம்பாமல் மற்றும் தன் கட்சி திமுக தொண்டர்களையும் நம்பாமல்  பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணர் காலில் மண்டியிட்டது திமுகவின் திராவிடவரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.  தமிழ்நாடில் வாங்கிய பூட்டுக்கு வடநாட்டு பார்பனிய சாவி எதற்கு? 

 

திமுகவின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை  நியமித்துள்ளார் ஸ்டாலின். இனி ஒரு வட நாட்டு ஆரியர்தான் திமுகவை வழிநடத்த உள்ளார்... மாற்றான் தோட்டத்து மல்லிகைகளே எங்கே போனது உங்கள் சுயமரியாதை? ஐயா வீரமணி பதில் சொல்வாரா? திராவிட முன்னேற்ற கழக தலைமையில் வெற்றிடம் உள்ளதால் ஒரு “பீகாரி”தலைமை ஏற்றார். என்றெல்லாம்  #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

...