உத்தரபிரதேச  அரசு ஆவணங்களில் அம்பேத்காரின் பெயரை பீம்ராவ்  'ராம்ஜி' அம்பேத்கார் என மாற்றி குறிப்பிடப்பட வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகினறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து  அவரது பெரும்பாலான நடவடிக்கைகள்  சர்ச்சைக்குரியவராகவே இருந்து வருகிறார்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள காவல் நிலையங்கள், பள்ளிகள் போன்றவற்றுக்கு  காவி வண்ணம் பூச் சொல்லி போட்ட உத்தரவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய முழுவதும் இதுவரை சட்ட மேதை டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்றே அனைத்து அரசு ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதனை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உ.பி., அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ராம்ஜி என்பது அம்பேத்காரின் தந்தை பெயர் ஆகும். 

உத்தரபிரதேச  கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, அம்மாநில  அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசு ஆவணங்கள், உயர்நீதிமன்ற ஆவணங்கள் என அரசிள் அணைத்து ஆவணங்களிலும் தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அரசியல் சாசன பக்கங்களில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. உ.பி., அரசின் இந்த உத்தரவிற்கு சமாஜ்வாதி . பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன..