அழகு நிலையத்தில் பெண்ணை காலால் எட்டி உதைத்து தாக்கியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக பிரமுகர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பெரம்பலூர், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சத்யா என்பவர் இருந்து வருகிறார். திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார். அழகு நிலைய உரிமையாளர் சத்யாவை, காலால் எட்டி உதைத்து செல்வகுமார் தாக்கினார். செல்வகுமார், சத்யாவை தாக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் அதிரடியா கைது செய்தனர். மேலும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்தது. 

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செல்வக்குமார் அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்ததையடுத்து அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.