தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தினகரனைப் பார்த்து, "நீங்கள் அழகாக இருக்கீங்க" என தினகரனைப் பார்த்து வீடியோ சமூக வலைதளத்தில் செம்ம வைரலாகி வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளன. அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன், அமமுக ஆரம்பித்து தமிழகம் முழுவதும் தேர்தல் அசுரர் வேகத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும்  தினகரன் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக அமமுகவில் துணை பொதுச் செயலாளர் தினகரன் சமீபத்தில்  கடலூர்  பிரசார கூட்டத்திற்காக காரில் சென்றபோது அவரை சிறுமி ஒருவர் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால், காரில் அமர்ந்திருந்த அவரை அந்தச் சிறுமியால் பார்க்க முடியவில்லை. இதனால் சிறுமியை தூக்கி காண்பித்தபோது அவருக்கு  கைகுலுக்கினார் தினகரன். 

"

அப்போது அந்தச் சிறுமி அவரைப் பார்த்து "நீங்கள் சூப்பரா இருக்கீங்க, அழகாகவும் இருக்கீங்க" என்று கூறுகிறார். அதற்கு அவர் "நான் அழகாகவா இருக்கிறேன்" என சிறுமியிடம் கேட்க, ஆமாம் என அழகாக தலையை அசைத்த அவர், நீங்க சீக்கிரமா  சிஎம் ஆகுங்க என தைரியமாகக் கூறினார். 

தினகரனுடன் குட்டிச் சிறுமி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சிறுமியைத் தொடர்ந்து காரின் அருகில் இருந்த சிறுவர், சிறுமிகளும் அழகாக இருக்கீங்க என கோஷமிட்டனர். அதைக் கேட்ட தினகரன் வெட்கப்பட்டு கையசைத்தபடியே அங்கிருந்து சென்றார்.