கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மோடி மற்றும் எம்ஜிஆர் போல வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கலை இலக்கிய பிரிவை சார்ந்த இருவர்.

கோவை தொகுதிக்குட்பட்ட சிங்காநல்லூர், சூலூர், கோவை தெற்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வாக்கு போட வேண்டும் என மக்களிடம் ஊர் ஊராக சென்று தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் இவர்கள் இருவர்.

இவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் மோடிக்காக வேடமிட்டு இருப்பவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த முகமது பாட்ஷா என்பவர் 65 வயதாகும் இவர் எப்போதுமே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்.

இதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி போன்று வேடமிட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்றவர். தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் அதிமுகவையும் விட்டுக்கொடுக்காமல் எம்ஜிஆர் போல வேடமிட்டு டேவிட் என்பவரும் பாட்ஷா உடன் சேர்ந்து கொண்டு மக்களிடம் மோடிக்காக வாக்கு கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் பாட்ஷா மற்றும் டேவிட் அதாவது மோடி மற்றும் எம்ஜிஆர் இவர்கள் இருவருக்கும் பெருத்த வரவேற்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.