உண்மை வெளிவரும்...! ஆளுநர் அதிரடி..!

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை இல்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளார்

கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது  தொடர்பாக,ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது  பல குற்றசாட்டுகள் முன் வைக்கப் பட்டது.

இந்நிலையில்  இது குறித்து  செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளுநர் தெரிவித்தது....

"எனக்கு 78 வயதாகிறது. எனக்கு பேரன் பேத்திகள் உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட  நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட கிடையாது..

என் மீது சுமத்தப்படும்  குற்றங்கள் அடிப்படை ஆதராம் அற்றவை  என்றும் தெரிவித்து  உள்ளார். 

பல்கலை கழக விவகாரங்களில் மாநில அரசு  தலையிட முடியாது எனவும்  

ஆணையம் விசாரணை முடிந்த பின், வழக்கை சிபிஐ  விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்படும் என தெரிவித்து  உள்ளார்.ஆனால் இப்போதைக்கு சிபிஐ விசாரணை இப்போது தேவை இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

காவல் துறையினர் அவர்களின் வேலையை  செய்யட்டும் என்றும் தெரிவித்து  உள்ளார்  ஆளுநர்  பன்வாரிலால்  புரோகித்